யார் முதலில் ஸலாம் உரைப்பது?



அல்லாஹ்வின் அருள் நிறைக!
போன பதிவில் ஸலாத்தின் சிறப்பு பற்றி பார்த்தோம். இப்பொழுது யார் முதலில் ஸலாம் சொல்வது என்பது பற்றி பார்ப்போம்.
           முதலிம் முந்திக் கொண்டு முகமன் கூறுவது என்பது கசப்பான மருந்து சாப்பிடுவது மாதிரி.
           பணம் உடையவர் ஏழ்மை நிலையில் உள்ளவரை பார்த்தால் நாம் எப்படி ஏழையான மனிதருக்கு முதலில் ஸலாம் சொல்வது, வசதி, வளத்தில் குறைந்தவர் வளம் மிக்கவரைப் பார்த்தால், வளம் குன்றியவனாக இருப்பதால் நாம் முதலில் ஸலாம் சொல்லனுமா? அவர் முதலில் ஸலாம் சொல்கிறாரா? பார்ப்போம் என்று எண்ணுவதும், முதலாளி தன் வேலையாட்களுக்கு முந்திக்கொண்டு ஸலாம் சொன்னால் முதலாளி என்ற தகுதி இழந்து விடுவது போன்றும், சக கல்வியாளர்கள் எதிர்பட நேர்ந்தால் யார் முதலில் ஸலாமை ஆரம்பிப்பது என்று தங்களது தனித்தன்மையை(prestige)நிலைநிறுத்த அருள் மிகுந்த அன்பு ஸலாமில் ஏற்றத் தாழ்வு என்ற மனப்பிதற்றலால் சுன்னத் எனும் நபிகளின் வழி சிதைக்கப் படுவதும் கீழ்காணும் ஹதீஸை கற்றறிந்த அல்லாமாக்கள் முதல் மார்க்கக் கல்வி கற்றறியாத கடைசி மனிதன் வரை எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் வருத்தத்திற்க்குரிய உண்மை நிலையாகும்.

            

           அன்பானவர்களே! மூத்தவர்கள் இளையவர்களுக்கு முன்னோடிகள்! ஆகையால் முதலில் மூத்தவர்கள்தான் முந்திக் கொண்டு இளையவர்களுக்கு முகமன் கூற வேண்டும்.
           நம்மவர்களுக்கு வாழ்க்கையை வாழ்ந்து காட்ட வல்ல அல்லாஹ்வால் அனுப்பப்பட்ட அண்ணலார் முஹம்மது (ஸல்) அவர்கள் தெருவில் நடந்து செல்லும் பொழுது சிறுவர்கள் இருந்தால் ஸலாம் கூறிவிட்டுத்தான் கடந்து சென்றிருக்கிறார்கள்.
           அன்பானவர்களே! அனஸ்(ரலி) அவர்கள் அறிவிக்கும் அறிவிப்பு புகாரி, முஸ்லிம் என்ற உயர்வான கிரகந்தங்களில் பதியப்பட்டுள்ளது,,

حدّث انس (رضي) انّه كان يمشى مع رسول الله (صلعم) فمرّ بصبيان فسلّم عليهم؛
           ஒருமுறை நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் நடந்து சென்றேன். அப்பொழுது அல்லாஹ்வின் தூதர் அவர்கள் சிறுவர்கள் சிலரை கடந்து சென்றார்கள். அப்பொழுது அச்சிறுவர்களுக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஸலாம் கூறினார்கள் என்று அறிவிக்கிறார்கள்.
           வயதில் மூத்தவர்கள் சிறுவர்களுக்கு முகமன் கூறுவது நல்ல முன்னுதாரணமாகும். இதன் மூலம் சிறுவர்கள் மீது பெரியவர்கள் காட்டும் பரிவும், பெரியவர்களின் அடக்கமும் பணிவும் வெளிப்படும். அத்துடன் முகமன் கூறும் பழக்கத்தை ஊக்குவிக்கும் பயிற்ச்சியாகும். சிறுவர்கள் சொல்லும் ஸலாமுக்குப் பெரியவர்கள் பதிலளிப்பதும் அவசியமாகும்.
இன்ஷாஅல்லாஹ் இன்னும் விரிவான ஹதீஸ் விளக்கத்துடன் மீண்டும் சந்திக்கிறேன். மஅஸ்ஸலாம்!


0 கருத்துகள்:

 
Download this Blogger Template From Coolbthemes.com