ஸலாம் சொல்லுங்கள்! சாந்தி அடையுங்கள்!





 

  அல்லாஹ்வின் அருள் நிறைக!
 அன்பானவர்களே!
அஸ்ஸலாமு அலைக்கும்!
ஒரு மனிதர் மரணம் சம்பவித்த வீட்டுக்குச்
செல்கிறார், அல்லது மரணித்தவரின் உறவுக்காரரை சந்திக்கிறார்.
அந்த சமயத்தில் குட்மார்னிங் அல்லது காலை வணக்கம் என்கிறார்.
அந்த சூழலுக்கு இந்த வாசகங்கள் மாதிரி முகமன் கூறுவது எதிரில் இருப்பவருக்கு சந்தோசத்தைத் தருமா?
               அல்லது நீங்கள் அயல் நாட்டில் இருக்க கூடிய உங்களின் உறவுக்காரரிடம் தொலைபேசியில் உரையாட தொடர்பு கொள்கிறீர்கள். நீங்கள் அழகிய மாலைப் பொழுதில்அழைக்கிறீர்கள். ஆனால் அவர் இனிய காலைப் பொழுதில் அயல் தேசத்தில் உள்ளார்.
                  இப்படி எதிரும் புதிருமான கால நேரங்களுக்கு அறிவு ஜீவிகள் கண்டுபிடித்த hai, good mornig எல்லாம் பொருத்தமான முகமன் என்று எடுத்துக் கொள்ள முடியுமா?
            எந்த சூழலுக்கும் பொருந்தும்மாதிரியான முகமன் என்ன? அதை எப்படி சொல்வது?
            இதை நமக்கு நம்முடைய அற்புத தலைவர் மனித இனம் அனைவருக்கும் அழகிய முன்னோடி, முத்தான நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் நீங்கள் ஒருவருக்கொருவர் சந்திக்கும் பொழுது “ஸலாம்” கூறிக்கொள்ளுங்கள் என்று  சொல்லி இருக்கின்றார்கள். 
                                    முகமன் என்பதைக் குறிக்க ஸலாம் எனும் சொல் சொல்லப்பட்டுள்ளது.
                இதற்கு சாந்தி, சமாதானம், பாதுகாப்பு, பணிதல், உவப்பு, ஒப்படைப்பு உள்ளிட்ட பொருள்கள் பொதிந்த அழகிய வாசகத்தை சொல்லி இருக்கிறார்கள்.
                ஸலாம் என்னும் முகமன் ஒருவரை ஒருவர் சந்திக்கும் பொழுது அன்பை பரிமாறிக்கொள்வதற்க்காக சொல்லப்படும் வார்த்தை.
                சந்திக்கும் இருவரில் ஒருவர் அஸ்ஸலாமு அலைக்கும் (உங்கள் மீது சாந்தி உண்டாகட்டும்) என்று கூற வேண்டும். பதிலுக்கு மற்றவர் வஅலைக்குமுஸ்ஸலாம் (அவ்வாறே உங்கள் மீதும் சாந்தி உண்டாகட்டும்) என்று கூற வேண்டும். அல்லது சில வாழ்த்துக்களை அதிகப்படுத்தி வஅலைக்குமுஸ்ஸலாம், வரஹ்மத்துல்லாஹி, வபரக்காத்துஹு (அவ்வாறே உங்கள் மீது சாந்தியும், இறையருளும், இறை வளங்களும் உண்டாகட்டும்) என்று கூற வேண்டும். இது ஒருவருக்கொருவர் தெரிவித்துக்கொள்ளும் வாழ்த்தாகவும், பிரார்த்தனையாகவும், வரவேற்ப்பாகவும் அமையும். காலை, மாலை, இரவு எல்லா நேரங்களுக்கும் மகிழ்ச்சி, துக்கம் ஆகிய எல்லா நிலைகளுக்கும் இந்த முகமன் ஏற்றதாகும்.
                உணர்ந்து உவப்புடன் ஓங்கி ஒலிப்போம்

அஸ்ஸலாமு அலைக்கும்!

சரிங்க, யார் முதலில் ஸலாம் சொல்வது?
                இன்ஷா அல்லாஹ் அடுத்த பதிவில் உம்மி நபியின் ஹதீஸ் விளக்கத்துடன் உங்களை சந்திக்கின்றேன். மஅஸ்ஸலாம்!

நிர்வாகம்




 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நவின்றுள்ளார்கள்,
                                           "அறிந்து கொள்ளுங்கள்! உங்களில் ஒவ்வொருவரும் நிர்வாகம் செய்பவராகவே இருக்கிறீர்கள்.
                      உங்களின் நிர்வாகம் பற்றி மறுமையில் விசாரிக்கப் படுவீர்கள்."
                            நாட்டின் தலைவர் அந்நாட்டு மக்களின் நிர்வாகி.
                            தனி மனிதன் தன் குடும்பத்தின் நிர்வாகி.
                            ஒரு பெண் தன் கணவரின் உடமைகளுக்கும், குழந்தைகளுக்கும் நிர்வாகி.
                            வேலைக்காரன் முதலாளியின் உடமைகளுக்கு நிர்வாகி.
                                     உங்களில் ஒவ்வருவரும் நிர்வாகம் செய்பவர்களே! அது பற்றியும் நீங்கள் விசாரிக்கப் படுவீர்கள்.        (நூல்; புகாரி)
                               இந்த ஹதீஸில், ஜனநாயகம்(அரசியல்), பெண்ணின் சிறப்பு, தொழிலாளியின் கடமைகள் பற்றிய ஆழமான கருத்துக்களும், அழகிய தீர்வுகளும் அடங்கியுள்ளது.
                             ஒரு நாட்டை நிர்வகிக்க கூடிய தலைவர் தன் நாட்டு மக்களுக்கு தேவையான பொருளாதாரம், கல்வி, சுகாதாரம், அடிப்படை தேவைகள் மற்றும் அந்நாட்டு மக்களின் பாதுகாப்பு இப்படி அனைத்திலும் கவனமாக நிர்வகிக்க வேண்டும்.
                            தனி மனிதன் தன் குடும்பத்தையும், ஒரு பெண் தன் கணவனின் உடமைகளையும், குழந்தைகளையும் நிர்வாகம் செய்யக்கூடிய பொறுப்பைப் பெற்றுள்ளனர்.
                         முதலாளியின் கடமையைக் குறிப்பிட்டு கண்டிப்புடன் பிரத்தியேகமாக கூறிய நபிகளார் (ஸல்) அவர்கள்,
                           தொழிலாளியை பாதுகாவலராக, முதலாளியின் உடமைகளை நிர்வகிக்க கூடியவர் என்ற உயர்வான அந்தஸ்தையும் தொழிலாளிக்கு கொடுத்துள்ளார்கள்.
அல்லாஹ் நம் அனைவருக்கும் நற்ச்செயல்களுடன் கூடிய நல் வாழ்வைத் தந்தருள்வானாக! ஆமீன்!

தமிழ் குர்ஆன், ஹதீஸ்





 தமிழ் குர்ஆன், ஹதீஸில் தேட இங்கு அழுத்தவும்.

அறிமுகம்

  அல்லாஹ்வின் அருள் நிறைக!        
அன்புடையீர்,
அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)
அன்பான அல்லாஹ்வின் நல்லடியார்களே!
இந்த வலைத்தளத்தின் மூலம் அல்லாஹ்வின் மார்க்கத்தின் உயர்வான விசயங்களைப் பகிர்ந்து கொள்ளக்கூடிய வாய்ப்பை அமைத்துக் கொடுத்த  அல்லாஹ்வைப் புகழ்ந்தவனாக அன்பான உள்ளங்களை சந்திக்கின்றேன்.
    அல்லாஹ் தன் உயர்வான கலாம் ஷரீபில் சூரா ஆல இம்ரானில்,
وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ ۚ وَأُولَٰئِكَ هُمُ الْمُفْلِحُونَ
3:104. மேலும், (மக்களை) நன்மையின் பக்கம் அழைப்பவர்களாகவும், நல்லதைக் கொண்டு (மக்களை) ஏவுபவர்களாகவும் தீயதிலிருந்து (மக்களை) விலக்குபவர்களாகவும் உங்களிலிருந்து ஒரு கூட்டத்தார் இருக்கட்டும் - இன்னும் அவர்களே வெற்றி பெற்றோராவர்.
     இந்த ஆயத்தில் அல்லாஹ் தஆலா நன்மையானவைகளை எடுத்துச் சொல்லி, தீமைகளை கவனத்திற்க்கு கொண்டு வரக்கூடிய 'அழைப்பாளர்கள்' எப்பொழுதும் அல்லாஹ்வின் சமுதாயத்தில் இருப்பார்கள் என்று அல்லாஹ் கோடிட்டு சொல்கிறான்.
      மார்க்க கல்வியை கற்றுக் கொள்ள வாய்ப்பளிக்கப்பட்ட என் போன்ற அல்லாஹ்வின் அடிமைக்கு நன்மையான விசயங்களை எடுத்துச் சொல்வது அவசியம் என உணர்கிறேன்.
இதன் மூலம் முழு முஃமினாக வாழ்ந்து மரணிக்க என்னை பக்குவப்படுத்திக் கொள்ளளாம் என்ற நிய்யத்தில் 'இன்னமல் அஃமாலு பின்னிய்யாத்'
என்ற கண்மனி ஸல்லல்லாஹூ(அலை)அவர்களின் முத்தான ஹதீஸை மனதில் நிறுத்தி உண்மை, உளத்தூய்மை இதற்க்கு முக்கியத்துவம் கொடுத்து தங்கள் அனைவரையும் வலைத்தளம் என்ற சாதனத்தை சாதகமாக்கி சந்திக்கிறேன்.
மஅஸ்ஸலாம்!


 
Download this Blogger Template From Coolbthemes.com