ஸலாம் சொல்லுங்கள்! சாந்தி அடையுங்கள்!





 

  அல்லாஹ்வின் அருள் நிறைக!
 அன்பானவர்களே!
அஸ்ஸலாமு அலைக்கும்!
ஒரு மனிதர் மரணம் சம்பவித்த வீட்டுக்குச்
செல்கிறார், அல்லது மரணித்தவரின் உறவுக்காரரை சந்திக்கிறார்.
அந்த சமயத்தில் குட்மார்னிங் அல்லது காலை வணக்கம் என்கிறார்.
அந்த சூழலுக்கு இந்த வாசகங்கள் மாதிரி முகமன் கூறுவது எதிரில் இருப்பவருக்கு சந்தோசத்தைத் தருமா?
               அல்லது நீங்கள் அயல் நாட்டில் இருக்க கூடிய உங்களின் உறவுக்காரரிடம் தொலைபேசியில் உரையாட தொடர்பு கொள்கிறீர்கள். நீங்கள் அழகிய மாலைப் பொழுதில்அழைக்கிறீர்கள். ஆனால் அவர் இனிய காலைப் பொழுதில் அயல் தேசத்தில் உள்ளார்.
                  இப்படி எதிரும் புதிருமான கால நேரங்களுக்கு அறிவு ஜீவிகள் கண்டுபிடித்த hai, good mornig எல்லாம் பொருத்தமான முகமன் என்று எடுத்துக் கொள்ள முடியுமா?
            எந்த சூழலுக்கும் பொருந்தும்மாதிரியான முகமன் என்ன? அதை எப்படி சொல்வது?
            இதை நமக்கு நம்முடைய அற்புத தலைவர் மனித இனம் அனைவருக்கும் அழகிய முன்னோடி, முத்தான நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் நீங்கள் ஒருவருக்கொருவர் சந்திக்கும் பொழுது “ஸலாம்” கூறிக்கொள்ளுங்கள் என்று  சொல்லி இருக்கின்றார்கள். 
                                    முகமன் என்பதைக் குறிக்க ஸலாம் எனும் சொல் சொல்லப்பட்டுள்ளது.
                இதற்கு சாந்தி, சமாதானம், பாதுகாப்பு, பணிதல், உவப்பு, ஒப்படைப்பு உள்ளிட்ட பொருள்கள் பொதிந்த அழகிய வாசகத்தை சொல்லி இருக்கிறார்கள்.
                ஸலாம் என்னும் முகமன் ஒருவரை ஒருவர் சந்திக்கும் பொழுது அன்பை பரிமாறிக்கொள்வதற்க்காக சொல்லப்படும் வார்த்தை.
                சந்திக்கும் இருவரில் ஒருவர் அஸ்ஸலாமு அலைக்கும் (உங்கள் மீது சாந்தி உண்டாகட்டும்) என்று கூற வேண்டும். பதிலுக்கு மற்றவர் வஅலைக்குமுஸ்ஸலாம் (அவ்வாறே உங்கள் மீதும் சாந்தி உண்டாகட்டும்) என்று கூற வேண்டும். அல்லது சில வாழ்த்துக்களை அதிகப்படுத்தி வஅலைக்குமுஸ்ஸலாம், வரஹ்மத்துல்லாஹி, வபரக்காத்துஹு (அவ்வாறே உங்கள் மீது சாந்தியும், இறையருளும், இறை வளங்களும் உண்டாகட்டும்) என்று கூற வேண்டும். இது ஒருவருக்கொருவர் தெரிவித்துக்கொள்ளும் வாழ்த்தாகவும், பிரார்த்தனையாகவும், வரவேற்ப்பாகவும் அமையும். காலை, மாலை, இரவு எல்லா நேரங்களுக்கும் மகிழ்ச்சி, துக்கம் ஆகிய எல்லா நிலைகளுக்கும் இந்த முகமன் ஏற்றதாகும்.
                உணர்ந்து உவப்புடன் ஓங்கி ஒலிப்போம்

அஸ்ஸலாமு அலைக்கும்!

சரிங்க, யார் முதலில் ஸலாம் சொல்வது?
                இன்ஷா அல்லாஹ் அடுத்த பதிவில் உம்மி நபியின் ஹதீஸ் விளக்கத்துடன் உங்களை சந்திக்கின்றேன். மஅஸ்ஸலாம்!

0 கருத்துகள்:

 
Download this Blogger Template From Coolbthemes.com